செய்திகள் :

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

post image

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர்.

கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் சேர்வடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியானது. இது பற்றி விசாரிக்க களம் இறங்கினோம்...

`தயவு செய்து பெயரை மட்டும் போட்டு விடாதீர்கள்' எனக் கூறிய கட்சி நிர்வாகிகள் சிலர், ``காலம் காலமாக கட்சிக்கு வேலை பார்த்து வரும் சீனியர்கள் பலர் தொகுதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி போராட்டங்கள், சிறைவாசம் எனக் கட்சிக்காக வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் கரூர் மாவட்டத்தில் பலர் இருக்க அதில், ஒருவர் கூட கட்சி தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது?

முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

தி.மு.க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வேட்பாளர் தேர்வு நடந்திருக்காது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் கரூர் மாவட்ட தி.மு.க-விற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்காது" எனத் புலம்பித் தள்ளினர்.

``2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கட்சி தலைமை முடிவு செய்து விட்டதாம்.

இதனால், கரூரில் இருந்து தனது ஆதரவாளர்கள் சிலரை கோவைக்கு இடம் மாற வைத்து சரியான அடித்தளத்தை அமைத்துள்ளார். கரூர் தொகுதியில்  போட்டியிடப் போவதில்லை என்பது தெரிந்தும், கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாகப் பாடுபட்டு வரும் பலர் இருக்க அதில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கட்சிக்குத் தொடர்பு இல்லாத ஆசி.தியாகரஜனுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

ஆசி. தியாகராஜன்
ஆசி. தியாகராஜன்

உண்மையான கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளிய சொல்ல முடியாதளவிற்குக் கொதித்துப் போய் உள்ளனர். செந்தில் பாலாஜிதான் கட்சி தொண்டர்களை மறந்து விட்டார் என்றால்? தி.மு.க தலைமையுமா கரூர் நிர்வாகிகளை மறந்து விட்டது? கட்சிக்காக காலம் முழுதுவம் பாடுபடும் தொண்டர்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுமதி இதுதானா?" எனச் சர வெடியாய் வெடிக்கின்றனர்.

யார் இந்த தியாகராஜன்?

65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவர் இவைதான் இவரது அரசியல் அனுபவம். இவருக்கு சீட்டு கொடுத்து இருப்பதால் கரூர் தி.மு.க-வினருக்கு மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க