செய்திகள் :

அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

post image

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று காலை அவருடைய மனு தள்ளுபடி செய்ய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சென்னை அமைந்தகரையில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை இன்று மாலைக் கைதுசெய்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்த நிலையில், அன்பில் மகேஸ் கைதைக் கண்டித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், `அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!"

`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ - தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

வேலூர் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``இந்த ஆட்சியில் எல்லாமே மர்மமாக இருக்கிறத... மேலும் பார்க்க

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! - பின்னணி என்ன?

செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத... மேலும் பார்க்க

``இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டது" - திமுக எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் குற்றங்களைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

அம்மா குடிநீர்: ``தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தவெக அரசு முடக்கி வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க