செய்திகள் :

"அன்பை லாரியில் அனுப்புகிறோம்" - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

post image

நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும்.

இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.

Rishab Shetty: "உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன!" - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள... மேலும் பார்க்க

"இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!"; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்... மேலும் பார்க்க

'உண்மையான அன்பை எனக்கு காட்டியவர்.!'- ராஷ்மிகாவை கரம்பிடித்த விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்' திரைப்... மேலும் பார்க்க

`என் இதயம் நிறைந்திருக்கிறது!' - கர்ப்ப கால நினைவுகளைப் பகிர்ந்த ராம் சரணின் மனைவி உபாசனா!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகன் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கெனவே கிளின் காரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண... மேலும் பார்க்க

Prakash Raj: சந்தீப் வாங்காவின் ‘Spirit’ படத்தில் இருந்து விலகுகிறேனா? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.அ... மேலும் பார்க்க

'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' - இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்... மேலும் பார்க்க