செய்திகள் :

"அப்பாபோல் அரசியலுக்கு வரமாட்டேன்; இயக்குநர் ஆகணுங்கிற ஆசை எனக்கு இருந்ததில்லை..!” - கென் கருணாஸ்

post image

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

தற்போது 'யூத்' படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

யூத்
யூத்

மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் 'யூத்' படம் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கென்னிடம் இயக்குநர் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. நான் இயக்குநர் ஆனது இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால் முதலில் எனக்கு ஒரு நல்ல நடிகனாக வேண்டும். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது.

'அசுரன்', 'விடுதலை', 'வாத்தி' படங்களில் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடித்ததால் எனக்கு சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது.

இதே மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு ஜாலியான என்டர்டெயின்ட்மன்ட் பண்ணுகின்ற மாதிரியானப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கென் கருணாஸ்
கென் கருணாஸ்

ஆனால் எந்த இயக்குநர்களும் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க அழைக்கவில்லை. அதனால் தான் நாமே படம் எடுப்போம் என்ற முடிவை எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அப்பா மாதிரி அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு, " நான் அரசியலுக்கு வர மாட்டேன், எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னுடைய அப்பாவின் வாழ்க்கை வேறு, என்னுடைய வாழ்க்கை வேறு" என்று பதிலளித்திருக்கிறார்.

நீளிரா: "ஈழம் தொடர்பான கதைகளைச் சொல்லணுங்கிறது என்னுடைய கனவு" - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நீளிரா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீளிரா படத்தில்...ஈழப் போரை மையப்படுத்திய இத்திரைப்படத்தில் நவீன்... மேலும் பார்க்க

தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" - பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

Kalidas 2: "இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்தது ஏன்?'' - பதில் தந்த 'பூவே உனக்காக' சங்கீதா

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

மணிரத்னம்: `அன்று சொன்னதை, இன்று செய்தார்!' - விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

மணிரத்னம் இயக்கியிருந்த 'தக் லைஃப்' திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரத்தில் கிசு கிச... மேலும் பார்க்க