செய்திகள் :

"அப்போ Active-ஆ இருந்திருந்தா இப்போ Inactive Modeக்கு தள்ளியிருக்க மாட்டாங்க"- திமுகவைச் சாடும் தவெக

post image

மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பான விவகாரம் இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாக உருவாகிவருகிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடாக அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். அதே நேரம், தற்போது இருக்கும் தவெக அரசு சரியாகச் செயல்படாததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தவெக தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``மேகதாது அணை விவகாரம், 2026 மே 10-ம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்கு திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.

ஆட்சியிலிருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர்.

தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது"

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க