செய்திகள் :

"அமெரிக்கக் குழந்தைகளுக்கு இரண்டு SpaceX பங்குகள்!" - எலான் மஸ்க் 'சூப்பர்' அறிவிப்பு

post image

உலகின் டாப் பணக்காரர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் வழங்கப்படும்.

ஒன்று நிறுவனத்தின் சார்பிலும், மற்றொன்று என் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

நேற்றைய நிலவரம் எப்படி?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம்தான் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது ஒரு பங்கு 135 டாலர் என பட்டியலிடப்பட்டது.

நேற்றைய (நவம்பர் 25) நிலவரத்தின் படி பார்த்தால், ஸ்பேஸ்எக்ஸின் ஒரு பங்கு 127.44 – 127.79 வர்த்தகமானது.

அமெரிக்க பங்குச்சந்தை கடந்த சில நாள்களாக கண்ட சரிவே, இந்தப் பங்கு விலையின் இறங்குமுகத்திற்கு காரணமாக இருக்கலாம்.

எலான் மஸ்க் பதிவு
எலான் மஸ்க் பதிவு

பொருளாதார நிபுணர்களின் பார்வை

நீண்ட கால அடிப்படையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு நல்ல மவுசு உள்ளது தான். ஏனெனில், ராக்கெட், விண்கலம் என அடுத்தடுத்து படிகளுக்கு அது முன்னேறிக்கொண்டே போகிறது.

டெக்னாலஜி, மொபைல் போன், இன்டர்நெட் இன்னும் வளர வளர இந்த நிறுவனத்தின் வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ட்ரம்ப் கணக்கு இருந்தால்...

எலான் மஸ்க் அறிவித்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்குகள் ட்ரம்ப் கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் சென்று சேரும்.

இந்தப் பங்குகள் வருகிற டிசம்பர் மாதம் ட்ரம்ப் கணக்குகளில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்கின் தற்போதைய அறிவிப்பின்படி, குழந்தைகள் என எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால், ட்ரம்ப் கணக்கை 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் வைத்திருக்க முடியும்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்குகளைப் பங்கு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்போ அல்லது அந்தக் குழந்தைக்கு 17 வயது பூர்த்தியாகும் காலண்டர் ஆண்டின் இறுதிக்கு முன்போ (இவற்றில் எது முதலில் வருகிறதோ) அதுவரை குடும்பத்தினரால் இந்தப் பங்குகளை விற்க முடியாது.

Trillion Dollar மதிப்பில் Anthropic; "இந்தியச் சந்தை இன்னும் முன்னேற வேண்டுமோ?"- உதய் கோட்டக் கேள்வி

இன்று (நவம்பர் 19 - அமெரிக்க நேரப்படி) அமெரிக்காவின் நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் ஏ.ஐ. நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் ஐ.பி.ஓ. வெளியாக இருக்கிறது. இதன் சாதாரண ‘கிளாஸ் ஏ’ பங்குகளின் ஐ.பி.ஓ. விலை 8... மேலும் பார்க்க

98 கோடி பங்குகள், 83 டாலர் விலை... பங்குச்சந்தைக்கு வரும் AI நிறுவனம் Anthropic; முழு விவரம்

பிசினஸ்கள் தொடங்கி மொபைல் போன்கள் வரை அனைத்திலும் ஏ.ஐ சிறப்பு இடம் பிடித்துவிட்டன. நிகழ்காலத்திலேயே நிரம்பியிருக்கும் ஏ.ஐ, எதிர்காலத்தில் எல்லாமுமாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு. அதனால், ஏ.ஐ ... மேலும் பார்க்க