செய்திகள் :

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில் ஒன்று ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கக் கூடாது" என்ற நிர்வாக உத்தரவு.

அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பிறகு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி நாள் அமர்வில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் எழுதிய தீர்ப்பில், ``அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள், அமெரிக்காவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

எனவே, அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின் குடியுரிமை பிரிவின் கீழ், அவர்கள் பிறப்பாலேயே அமெரிக்க குடிமக்கள் ஆகிறார்கள். குடியுரிமை என்பது உரிமைகளைப் பெறுவதற்கும், நமது அரசியல் சமூகத்தில் சுதந்திரமாகப் பங்கேற்பதற்குமான ஒரு அடிப்படை உரிமை. 14-வது அரசியலமைப்புத் திருத்தத்தை உருவாக்கியவர்கள், இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு சுதந்திரமான நபருக்கும் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர். அந்த வாக்குறுதியை இன்று நாம் நிலைநாட்டுகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் 'பிறப்பு சுற்றுலா' போன்ற சட்டவிரோத திட்டங்களைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். குடியுரிமை ஓட்டைகளைப் பயன்படுத்தித் தங்களது குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை பெற முயற்சிப்பவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றும் எச்சரித்திருக்கிறது.

மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர, அமெரிக்காவில் பிறக்கும் எவரும் குடிமகனே என்று அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், இக்கொள்கையை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ட்ரம்ப் இதற்கு நாடாளுமன்றச் சட்டமே போதும் என்று கூறி வருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தத் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ட்ரூத் பக்கத்தில், ``உச்ச நீதிமன்றம் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை உறுதி செய்துள்ளது. இது நம் நாட்டிற்கு மிகவும் மோசமானது. ஆனால், அதிபரின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் இதை நாம் எளிதாக ஈடுகட்ட முடியும். இதற்கு நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை! நாட்டின் பணத்தை வீணடிக்கும், அநீதியான இந்த பிறப்பு குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகளை நாடாளுமன்றம் இன்றே தொடங்க வேண்டும். அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவு இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்... மேலும் பார்க்க

ரூ.1,024 கோடி மதிப்பீட்டில் மதுரை ரிங் ரோடு திறப்பு; நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு | Album

1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில்... மேலும் பார்க்க

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் பேருந்து ... மேலும் பார்க்க

`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்' - வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு!

தமிழக அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்து 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பி இனி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்... மேலும் பார்க்க

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை... மேலும் பார்க்க