செய்திகள் :

'அமைச்சருக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்ட சேகர் பாபு!' - 'ஸ்பை' அதிகாரி; தவிப்பில் அமைச்சர் ரமேஷ்?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்திருந்தது. அறநிலையத்துறையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பேசும் முன்பே '106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடவிருக்கிறார்' என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் அறிவிக்கும் முன்பு திமுக முகாமுக்கு தகவல் எப்படி கசிகிறது என அமைச்சர் ரமேஷ் உட்பட ஒட்டுமொத்த தவெக முகாமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.

சேகர் பாபு
சேகர் பாபு

அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான தீர்மானங்களை அமைச்சர் ரமேஷ் நேற்று அவையில் முன்வைத்திருந்தார். மானியக் கோரிக்கை மீது திமுகவின் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியிருந்தார்.

அப்போது திமுக அறநிலையத்துறைக்காக செய்த திட்டங்களை பட்டியலிட்டு விட்டு தவெக அரசையும் விமர்சித்து பேசியிருந்தார். பேச்சை முடிக்கையில், 'இன்றைக்கு 106 அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறீர்கள். அதில் எத்தனை அறிவிப்புகளை செய்கிறீர்கள் என பார்ப்போம்' என்று முடித்தார். மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏக்களெல்லாம் பேசி முடித்த பிறகுதான் அமைச்சர் பதிலுரை வழங்குவார். அந்த பதிலுரையில்தான் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார். அப்படி அமைச்சர் அறிவிப்புகளை சொல்லும் முன்பே '106 அறிவிப்புகள்' என சேகர் பாபு குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை சபாநாயகரும் கவனித்திருந்தார்.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

எல்லா உறுப்பினர்களும் பேசி முடித்த பிறகு அமைச்சர் ரமேஷ் பதிலுரையை தொடங்கினார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர், 'அமைச்சர் அறிவிக்கும் முன்பு காலையிலேயே சேகர் பாபு எப்படி '106' அறிவிப்புகள் என சரியாக சொன்னார் என்று சிந்தித்து பார்க்கிறேன்' என்றார். '106 அறிவிப்புகள் என புலனாய்வு செய்து கண்டுபிடித்த சேகர் பாபு அவர் கேட்ட கல்லூரி விஷயமும் அறிவிப்பில் இருக்கிறது என்பதை அறியவில்லை போல...' என அமைச்சர் ரமேஷூம் பதில் கூறினார்.

ஆனால், அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடும் முன்பே அது எதிர்க்கட்சியின் முக்கியஸ்தருக்கு கசிகிறது என்பதையும் அதை அந்த உறுப்பினர் அவையிலேயே போட்டுடைத்து மூக்குடைக்கிறார் என்பதையும் அமைச்சர் ரமேஷ் உட்பட ஒட்டுமொத்த தவெக முகாமுமே சீரியஸாகவே பார்க்கிறது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர். திமுக ஆட்சியில் சேகர் பாபுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த இப்போது முக்கியமான இரண்டு துறைகளை கையில் வைத்திருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மீதுதான் அமைச்சர் தரப்பின் சந்தேகப் பார்வை நீள்வதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க