செய்திகள் :

அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: ``ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்" - தெலங்கானா அமைச்சர் ஆதரவுக் குரல்

post image

தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ``தமிழ்நாடு எதிர்காலத்திற்காகக் காத்திருக்கவில்லை; நாங்களே அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். Single-window approvals, அதிவேகக் அனுமதிகள் முதல் AI cities, Space economy வரை, கண்டுபிடிப்புகளும் செயல்பாடுகளும் ஒன்றிணையும் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழ்நாட்டை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதியுடன் உள்ளோம். எதிர்காலம் இங்கேதான் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்" என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த ரீல்ஸ் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ``அன்பிற்குரிய கீர்த்தனா காரு, முதலீட்டாளர்களை நோக்கிய உங்களது இந்தச் செயலூக்கமான அணுகுமுறையைப் பாராட்டுகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழில் துறை அமைச்சரும் தங்களது மாநிலத்தைத் தீவிரமாகச் சந்தைப்படுத்தவும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.

தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்
தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்

மாநிலங்கள் தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை ஊக்குவித்துள்ளார். நிச்சயமாக, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான போட்டியை வழங்கும்!

மேலும், தேவையில்லாத சத்தங்களைப் புறக்கணியுங்கள் – இணையப் பக்க ட்ரோல்கள் (Trolls) வேலைவாய்ப்புகளை உருவாக்காது, முதலீடுகள் மட்டுமே உருவாக்கும்!" என்று அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க