செய்திகள் :

அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம்; இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு மகன்கள். இந்த நிலையில், சமீபத்தில் கோட்டையா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வாழ்வாதாரம் இழந்து இரு மகன்களுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி வள்ளி கஷ்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கணவரின் மரணம் அவரை மீளமுடியாத வேதனைக்கு ஆளாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

வள்ளி

இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு தனது இரு மகன்களையும் அழைத்துசென்ற வள்ளி, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி மார்க்கமாக சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ரயிலில் சிக்கியதில் இரு பிள்ளைகளும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். தகவலறிந்ததும், அரக்கோணம் ரயில்வே போலீஸார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க

இன்ஸ்டா நட்பு; புகைப்படத்தை ஆபாசமாகத் திரித்து மிரட்டும் இளைஞன்; போலீஸில் மாணவி புகார்!

வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், காட்பாடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மனுவில் அவர், ``நான் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனக்கு இன்ஸ்டாகிராம் ... மேலும் பார்க்க

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கபட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் தமி... மேலும் பார்க்க

'அப்பா, அம்மாவை தனியாக விட்டுவிடாதே' - ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்‌ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்... மேலும் பார்க்க

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகு... மேலும் பார்க்க