செய்திகள் :

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

post image

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும்பாலான மக்களின் வாதம். அடுத்த தேர்தல் நெருங்கும்போது ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிடுவது வழக்கம்.

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கிராமத்தில் இருக்கும் தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் தெருநாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பகடபல்லி என்ற கிராமத்தில் கடந்த 22-ம் தேதி 300 நாய்கள் விஷ ஊசி போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இதே போன்று காமரெட்டி மாவட்டத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாச்சரம் என்ற கிராமத்தில் 100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாயம்பேட் மற்றும் அரேப்பள்ளி கிராமங்களில் 300 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அவர்களின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள பதிபகா என்ற கிராமத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விலங்குகள் நல ஆர்வலர் கெளதம் இக்கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,'' பஞ்சாயத்து செயலாளர் உத்தரவின் பேரில் தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர்''என்று தெரிவித்தார். அவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் தெலங்கானாவில் 1100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க