செய்திகள் :

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

post image

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு காப்பாளர்கள் கடும் எதிர்ப்பையும் கவலையையும் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட லார் கிப்பான், அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமாகும்.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கைத் தனியார் இடத்தில் வளர்ப்பது சட்டப்பூர்வமானதா? அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் வனத்துறை அனுமதி உள்ளதா? என்று கேள்விகள் எழுந்தன.

மேலும், பிரபலங்கள் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது சட்டவிரோத வனவிலங்கு கடத்தலை ஊக்குவிக்கும் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இந்த விலங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்ரம்
விக்ரம்

அந்த விலங்கு எவ்வாறு இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது மற்றும் அதை வளர்ப்பதற்கான உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Karnataka SIR: "வாக்குரிமை நீக்கப்பட்ட வாக்காளர்களில் நானும் ஒருவன்" - வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்

கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிரு... மேலும் பார்க்க

"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறிவது என்ன?

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

"அந்தப் படம் வந்தப்ப என்ன படிச்சுட்டிருந்தீங்க?"- சூர்யாவின் கேள்விக்கு மமிதா பதில்; கலாய்த்த ராதிகா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 14

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 14அரியணையில் ஒரு கோமாளி!சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்த... மேலும் பார்க்க

Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங்கட் பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

"அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு..!"- மமிதா குறித்து சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க