செய்திகள் :

"அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" - ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன?

post image

கடந்த ஜூன் 17-ம் தேதி, ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையொட்டி, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான். இந்த மூடலை மீறி ஹார்முஸை கடக்க முயலும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது ஈரான்.

ஈரானின் அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தருகிறது அமெரிக்கா.

இதே மாதிரியான சம்பவம் ஒன்று தான் நேற்றும் நடந்தது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்

இந்த நிலையில், நேட்டோ மாநாட்டிற்காக துருக்கி சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அங்கே, 'ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது' என்கிற அறிவிப்பை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப் பேசியதாவது...

"என்னைப் பொறுத்தவரை எல்லாம் (போர் நிறுத்தம்) முடிந்துவிட்டது. இனிமேல் நான் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

அவர்கள் மட்டமானவர்கள், உங்களுக்கு மட்டமானவர்கள் என்றால் என்னவென்று தெரியும்தானே? அவர்கள் அப்படித்தான். அவர்கள் ஒரு மனநோயாளிகள். ஒரு மோசமான கூட்டம்தான் அவர்களை வழிநடத்துகிறது.

அவர்கள் கொடூரமான மற்றும் வன்முறை குணம் கொண்ட மனிதர்கள். அவர்களிடம் மட்டும் அணுஆயுதங்கள் இருந்தால், அவர்கள் அதை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது.

நான் நமது பேச்சுவார்த்தைக் குழுவிடம் பேசுவேன்—அவர்கள் தொடர்ந்து பேச விரும்புகிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள்: ஸ்டீவ் வுடாஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர்.

ஆனால், அவர்கள் இறுதி முடிவுக்கு என்னிடம்தான் வந்தாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அவர்களுடன் பேசுவது வெறும் நேர விரயம் மட்டும்தான்.

ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து
ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

அவர்கள் பச்சைப்பொய்யர்கள். நாம் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவோம், எல்லாரும் அதற்குச் சம்மதிப்பார்கள் - அணுஆயுதம் இருக்கக் கூடாது என்று.

ஆனால், நாம் உடன்படிக்கை செய்து முடித்த உடனே, அவர்கள் நேராக ஊடகங்களின் முன்னே போய் நின்று கொண்டு, 'நாங்கள் அதைப்பற்றிப் பேசவே இல்லை' என்பார்கள்.

அவர்களிடம் ஏதோ ஏறுமாறாக இருக்கிறது, அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது."

விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் - ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற அமைச்சகத்தின் பெயர் ‘சமூகநீதித்துறை’ என மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர் வன்னி அரசு பத... மேலும் பார்க்க

`திமுக, அதிமுக-வுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்' - அமைச்சர் நிர்மல்குமார் ஆருடம்

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏ... மேலும் பார்க்க

ஆலங்குளம்: அரசு நெல் சேமிப்பு மையத்தில் பயங்கர தீ – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம்?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில் செயல்பட்டு வரும் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

'நோபல் பரிசு கொடுக்கலாம்'- திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவின் கருத்துக்கு வைகோ பளிச் பதில்

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.இது​வரை நா... மேலும் பார்க்க

தூத்துக்குடி தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளம்; ஒரு மாதத்தில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி! - என்ன பிரச்னை?

தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றால் மட்டுமே வாகனங்களை ஓட்ட முடியும். நான்கு சக்கர வாகனம் ஓட்டிட உரிமம் விரும்புவோர், முன்னதாக மோட்டார் வா... மேலும் பார்க்க

முதல்வரின் திடீர் மக்கள் சந்திப்பு; தலைமைச் செயலகம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறும் போது முதலமைச்சர் விஜய் திடீரென பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகைய... மேலும் பார்க்க