செய்திகள் :

`அவள் எனக்கு மட்டும்தான்’ - வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

post image

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்குத் தொடர்பாக, அரியூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுகாஞ்சியைச் சேர்ந்த ராகுல் (26) என்ற இளைஞன் சிக்கினார். வினோத்குமாரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு, ராகுல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கொலை

அதாவது, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்துவந்த வினோத்குமாருக்கு சிறுகாஞ்சியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண், ராகுலுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

இதைத் தெரிந்துகொண்ட வினோத்குமார், அந்தப் பெண்ணிடம் சென்று, `ராகுலுடன் பழகக் கூடாது. நீ எனக்கு மட்டும்தான்’ என்று கண்டித்திருக்கிறார். அதற்கு அந்த பெண், `தேவையில்லாத விஷயத்துல தலையிடாம உன் வேலையை மட்டும் பார். இனிமே, என் வீட்டுப் பக்கம் வராதே’ என்று வினோத்குமாரிடம் கண்டிப்புடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும், அந்தப் பெண்ணின் வீட்டில் வினோத்குமார் சண்டைப் போட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ராகுல், வினோத்குமாரிடம் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதையடுத்து, அன்றிரவு வினோத்குமார் மது வாங்கிக்கொண்டுவந்து அந்தப் பெண்ணின் வீட்டருகே உள்ள விவசாய நிலப்பகுதியில் தனியாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தாராம்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இதைக் கவனித்த ராகுல், அங்கு சென்று போதையில் இருந்த வினோத்குமாரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியும், கழுத்தில் குத்தியும் கொலை செய்திருக்கிறார்.

அப்போது, `அவள் எனக்கு மட்டும்தான்’ என்று கூறி, கொலைக்குப் பயன்படுத்திய கம்பியையும் அங்குள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ராகுலைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கின்றனர்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க