செய்திகள் :

அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

post image

எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான‌ 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர்.

எல். முருகன்
எல். முருகன்

மத்திய இணை அமைச்சர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ‌.க வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எல்.முருகன் பா.ஜ.க - வின் முன்னாள் மாநில தலைவர் என மத்திய அரசு மற்றும் பா.ஜ.க- வின் முக்கிய பதவிகளை வகித்தாலும் எல். முருகனுக்கு தேர்தல் அரசியல் வெற்றியாக அமைந்ததில்லை.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவிடம் தோல்வியைத் தழுவினார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மக்களால் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் ஓட்டு அரசியல் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தான், அவிநாசி தொகுதியை விரும்பித் தேர்வு செய்திருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் எல். முருகன், தொகுதியில் உள்ள மகளிர் வாக்குகளை கவர பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

எல். முருகன்

பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகி ஒருவர், " வாக்காளர்களுக்கு வெறுமனே நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. இதற்காகவே 'வீடு வீடாக மகளிரணி ' என்கிற பெயரில் பா.ஜ.க மகளிர் அணியில் புது குழு உருவாக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறோம். மகளிர் அணி சார்பில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வெற்றி வியூகங்களை க வருகிறோம்.

`முத்ரா கடன் திட்டம்', `ஜல்‌ ஜீவன்' போன்ற பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களை பெண்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். மேலும், பா.ஜ.க - வின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் இல்லத்தரசிகளிடம் எடுத்துரைத்து வருகிறோம். மகளிர் மத்தியில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது" என்றார். எல்.முருகனின் வியூகம் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.

`ஹோலோகிராம் டு ரோபோட்' - ஹைடெக் பிரசாரத்தில் கலக்கும் தவெக-வினர்!

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் நேற்று (20.04.2026) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ரோபோட்டுடன் இணைந்து வீதியோரங்களில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ரோபோட்டின் கழுத்தில் கட்சிக... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரி... மேலும் பார்க்க