செய்திகள் :

'ஆடம்பர ரெஸ்டாரண்ட், சொகுசு கார்' - திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்

post image

டெல்லியைச் சேர்ந்த விக்ராந்த் தோமர் என்ற வாலிபர் தன்னை பணக்காரத் தொழிலதிபர் போன்று காட்டி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் பதிவுகளை வெளியிட்டார்.

அதோடு தனக்கு ஆடம்பர ரெஸ்டாரண்ட்கள், சொகுசு கார்கள் இருப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் அவருக்கு பெண் கான்ஸ்டபிள்களுடன் தொடர்பு இருப்பதையும் காட்டி இருந்தார்.

இந்நிலையில் டெல்லி கரோல்பாக் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை விக்ராந்த் ஏமாற்றியதாகப் புகார் அளித்தார். இப்புகாரின் மீது போலீஸார் விசாரணை நடத்தியபோது மேலும் ​​பல பெண் கான்ஸ்டபிள்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

தோமர் விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த காணொளிகளைக் காட்டி பெண் கான்ஸ்டபிள்களைக் கவர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த பிறகு, பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் காவலர்களை நம்ப வைப்பதற்காக ஆடம்பர சொகுசு கார்களை 8 மணி நேரம் வாடகைக்கு எடுத்து பெண் கான்ஸ்டபிள்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனால் பெண் கான்ஸ்டபிள்கள் உண்மையிலேயே விக்ராந்த் பணக்காரர் என்று நம்பி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் ​​சுமார் 20 பெண் கான்ஸ்டபிள்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல பெண் கான்ஸ்டபிள்கள் இதுவரை முறையான புகாரை அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபருடன் இணைந்து லிவ் இன் முறையில் வசித்து வரும் பெண்ணும் டெல்லி காவல் துறையில் பணிபுரிகிறார்.

அந்தப் பெண் கான்ஸ்டபிள் மூலமாகவே, பெண் கான்ஸ்டபிள்கள் தகவல்களை தோமர் பெற்று, அவர்களைக் குறிவைத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் தோமர் மீது பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் பெண் கான்ஸ்டபிள்களிடம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை: சாலையோரம் வெட்டி வீசப்பட்ட இளைஞர்; கூட்டாளிகளுடன் சிக்கிய நண்பன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ஜீவா என்கிற தமிழ்வாணன். இவர் கடந்த 21-ம் தேதி இரவு, வன்னிவேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையோரமாக வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

கேரளம்: கள்ளநோட்டு அச்சடிக்கும் மையம் கண்டுபிடிப்பு; அச்சடிக்க தயாராக இருந்த தாள்கள் பறிமுதல்

கேரள மாநிலம் ​கொல்லம் வாடி கல்லேலிவயல் புரயிடம் பகுதியைச் சேர்ந்தவர் சிபியோன். இவர் கடந்த 16-ம் தேதி திடீரென மாயமானதாகவும், அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி போலீஸில் புகார் அளிக்கப்பட... மேலும் பார்க்க

மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் ஹசன் அபு அக்பர் என்ற அந்த நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக... மேலும் பார்க்க

கணவன்-மனைவி பிரச்னையைத் தீர்ப்பதாக நடித்த போலீஸ் ஏட்டு; இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​கருங்கல் அருகே நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜோசப் மெசியா தாஸ் தற்போது வெளிநாட்டில் வ... மேலும் பார்க்க

காரைக்குடி: காதலனின் நண்பனுடன் வெளியேறிய காதலி - கொலையில் முடிந்த முக்கோணக் காதல் கதை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் சாலையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணில... மேலும் பார்க்க

விஜயதசமி கொண்டாட்டம்: வானைநோக்கி AK 47-ஆல் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி; நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் அங்கிதா சர்மா. கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு, காவல் ஆயுதப் படையில் நடைபெற்ற 'சாஸ்திர பூஜை' நிகழ்வ... மேலும் பார்க்க