செய்திகள் :

"ஆண் பிள்ளைகளை கோலி, ரோஹித் ஆக்க விரும்பும் பெற்றோர் பெண் பிள்ளைகளை அப்படி விரும்புவதில்லை" - ஜெய்ஷா

post image

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 1973 முதல் கால் நூற்றாண்டுக்கும் மேலாக WCAI எனும் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

பின்னர், 2005-ல் இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அடுத்தாண்டு முதல் பி.சி.சி.ஐ இந்திய மகளிர் கிரிக்கெட்டையும் சேர்த்து நிர்வகிக்கத் தொடங்கியது.

ஆனாலும் இந்திய அணியில் வீரர்களுக்கு அதிக சம்பளமும், வீராங்கனைகளுக்கு மிகக் குறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

2019-ல் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பி.சி.சி.ஐ செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு 2022 அக்டோபரில் இந்திய அணியில் வீரர்கள், வீராங்கனைகள் இருபாலருக்கும் சம ஊதியத்தைக் கொண்டுவந்தார்.

அவருக்கு முன்பாக முதல் நாடாக அதே ஆண்டில் ஜூலை மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐந்தாண்டு ஒப்பந்தம் அடிப்படையில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சம ஊதியத்தைக் கொண்டுவந்தது.

இன்று வரை இந்த இரண்டு கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே இருபாலருக்கும் சம ஊதியத்தை அளிக்கின்றன.

பி.சி.சி.ஐ-யில் இப்படியொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்த ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார்.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ செயலாளராகத் தான் எடுத்த முடிவுகளில் தனக்குப் பிடித்த முடிவுகள் எவை என்று ஜெய் ஷா பேசியிருக்கிறார்.

நேற்று தனியார் ஊடகமான CNN News18 ஜெய் ஷாவுக்கு '2025-ம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்தது.

Jay Shah - ஜெய் ஷா
Jay Shah - ஜெய் ஷா

இந்நிகழ்ச்சியில், முதல்முறையாக இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்ற முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவுக்கு முதல்முறையாக உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்களையும் சேர்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு இந்த விருதை ஜெய் ஷா அர்ப்பணித்தார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ஜெய் ஷா, ``2019 அக்டோபர் 23-ம் தேதி பி.சி.சி.ஐ செயலாளராக நான் பொறுப்பேற்றேன். அன்றிலிருந்து 2024 டிசம்பர் 1-ம் தேதி வரையில் நாங்கள் நிறைய முடிவுகளை எடுத்தோம், நிறைய சாதனைகள் படைத்தோம்.

உள்ளூர் போட்டிகள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். சம ஊதியத்தைக் கொண்டு வந்தோம். மகளிர் ஐ.பி.எல் (WPL) தொடங்கினோம். எந்தச் சர்ச்சையும் இல்லாமல் ரூ. 50,000 கோடி மதிப்பிலான ஒளிபரப்பு உரிமைகளை விற்றோம்.

அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமியை அமைத்தோம். பெர்த், கேப் டவுன், சிட்னி, லார்ட்ஸ் போன்ற அனைத்து வகையான பிட்ச்களும் இங்கு பயிற்சிக்காக உள்ளன.

Jay Shah - ஜெய் ஷா
Jay Shah - ஜெய் ஷா

ஆனால், இவற்றில் எனக்கு பிடித்தவை சம ஊதியம் கொண்டு வந்ததும், மகளிர் ஐ.பி.எல் ஆரம்பித்ததும்தான். அதன் பலனைச் சமீபத்தில் பார்த்தோம் (மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது).

ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் அவரது அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். அனைவரின் இதயங்களையும் நீங்கள் வென்றுவிட்டீர்கள். மேலும், ஆண்கள் வெற்றி பெற அழுத்தம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

பெற்றோர் தங்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தால் அதில் ஆண் பிள்ளைகள் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்று உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால், பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்க விரும்புவதில்லை.

நாங்கள் சம ஊதியம் கொண்டுவந்துவிட்டதால் இனி பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்குவார்கள்" என்று கூறினார்.

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க

"சச்சின் அப்படி நெனச்சிருந்தா என்னால அதைச் செய்திருக்கவே முடியாது"- கங்குலியின் கேப்டன்சி சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை.2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியா... மேலும் பார்க்க

விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்க... மேலும் பார்க்க

`கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நவம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 - 0 என தென்னாப்பிரிக்கா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 - 1 என... மேலும் பார்க்க