செய்திகள் :

``ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" - கே.பி.முனுசாமி விமர்சனம்

post image

"தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், சாதாரண விவசாயியாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள்" என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா - கே.பி.முனுசாமி

தருமபுரியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், செய்தியாளர்களிடம் பேசும்போது,

"அதிமுக குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கட்சியில் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். எனவே இனிமேல் அதிமுக-வில் இளைஞர் பட்டாளம் பெருக்கெடுப்பார்கள்.

நிர்வாகத் திறன் இல்லாத தவெக ஆட்சியில் அனைத்து நிலை அதிகாரிகளும் ஊழியர்களும என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த ஐந்து மாதங்களாக மெத்தனமாக இருக்கிறார்கள். இதே அதிகாரிகள் மூலமாகத்தான் அதிமுக ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை வழங்கினோம். இப்போது நிகழ்வதுபோல் மின்வெட்டு இல்லாமல்... உற்பத்தி செய்த உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தோம்.

அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கரை வேட்டி கட்டிய லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார்கள். அதனால், அதிமுக-விலிருந்து சென்றவர்கள் மீண்டும் வந்துதான் இந்த இயக்கம் பலமடைய வேண்டும் என்பதில்லை. அவர்களைப் பற்றி பேச வேண்டியதும் இல்லை.

ஆதவ் அர்ஜுனா இப்போது நிழல் முதலமைச்சர்போல் செயல்படுகிறார். அது முறையல்ல. அதிமுக-வை விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அரசியல் பாரம்பர்யம் மிக்க குடும்பத்திலிருந்து அவர் வந்ததால் அவரை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் சாதாரண விவசாயியாக இருந்து அதிமுக-வின் பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள். வெற்றி தோல்விக்கு தலைமை மட்டுமே காரணம் இல்லை, அரசியல் சூழ்நிலையும் காரணம்.

அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது. விஜய் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்" என்றார்.

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் - இரண்டிற்கும் தயாராகும் ஈரான் - என்ன நடக்கிறது?

வருகிற நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ‘அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது’ என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.நவம்ப... மேலும் பார்க்க

நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" - வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த... மேலும் பார்க்க

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கைதாகி, புழல் சிறையில் அடைக்... மேலும் பார்க்க

கார்த்திகா கைது விவகாரம்: 'திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை!' – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு... மேலும் பார்க்க

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புத... மேலும் பார்க்க

"2, 3 நாள்களில் ரஷ்யாவிலிருந்து டீசல் ஏற்றுமதி; அமெரிக்காவுக்கு உரமும் அனுப்பத் தயார்" - புதின்

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது...“உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் ... மேலும் பார்க்க