செய்திகள் :

"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்‌ பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், " த.வெ.க அரசு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவால் உள்ளது. இது நிலையில்லாத ஆட்சி. இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.

எடப்பாடி பழனிசாமி

மக்களைப் பற்றி சிந்திக்காத அரசாங்கம் இது. மக்களுக்கு நல்ல குடிநீர், சாலை வசதி கொடுங்கள். விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுங்கள். இந்த பிரச்னைகளை பற்றி கவலை கொள்ளாமல், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதிலேயே குறியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க, தி.மு.க மாறி மாறி ஆட்சி செய்துள்ளோம். எப்போது ஆட்சி செய்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நலனுக்கு மட்டுமே செயல்படுகின்றனர்.

கட்சி தொடங்கியே 3 வருடம் தான் ஆகிறது. ஆனால், அ.தி.மு.க- வைப் பார்த்து தீர்ந்து போன கட்சி என்று சொல்கின்றனர். நான் கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவன். மக்களுக்கு என்ன பிரச்னை என்று உணர்வு பூர்வமாகப் புரிந்து கொண்டவன். நல்ல சாலை, குடிநீர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் போல், எந்த ஆட்சியிலும் கொண்டு வரமுடியாது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைப் போன்று பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர்கள் நாங்கள் இல்லை. அவர் தி.மு.க-வில் இருந்தார், பின்னர் வி.சி.க- வுக்கு போனார். பின்னர், என்னிடம் வந்து அ.தி.மு.க-வில் துணை பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என கேட்டார்.

எடப்பாடி

அ.தி.மு.க- வில் கட்சி பதவிகளை விற்பனை செய்வதில்லை. உழைப்பவர்களுக்கு தான் பதவி கிடைக்கும் என்று கூறினோம். அதனால், தவெகவிற்கு சென்று, பின்னர் அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். இப்படி பல கட்சி மாறிய ஆதவ் அர்ஜூனாவுக்கு, அ.தி.மு.க பற்றி பேச தகுதியில்லை. எந்த கட்சியிலும் நிலைத்து இருக்காத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒரு வேடந்தாங்கல் பறவையாக உள்ளார். கரூரில் த.வெ.க தேர்தல் பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களை பார்க்கக் கூட போகவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. கட்சி அலுவலகத்தை 15 நாள்களுக்கு மூடி விட்டு சென்று விட்டனர். வீர வசனம் பேசிய ஆதவ் அர்ஜூனா வௌிமாநிலத்திற்கு சென்று பதுங்கி விட்டார்" என்றார் .

`3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை...' - அமைச்சர் தமிழன் பார்த்திபன்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.இந்தச் ச... மேலும் பார்க்க

தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: ``இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" - கராத்தே தியாகராஜன் கேள்வி

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் க... மேலும் பார்க்க

“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்...”- அன்புமணி காட்டம்!

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " கடலூர் மாவட்... மேலும் பார்க்க

தவெக: ``ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா ... மேலும் பார்க்க

'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப... மேலும் பார்க்க