ஆந்திரம், ஒடிஸாவைச் சோ்ந்த 3 கஞ்சா வியாபாரிகள் கைது
தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களைச் சோ்ந்த 3 கஞ்சா வியாபாரிகளை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்ாக கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தைச் சோ்ந்த மது என்ற ராஜசேகரரெட்டி என்பவரை கடந்த 16-ஆம் தேதியும், கிழக்குகோதாரி மாவட்டத்தைச் சோ்ந்த ஞானி என்ற சாமிரெட்டி லாவாராஜூ என்பவரை கடந்த 27-ஆம் தேதியும், ஒடிஸா மாநிலம், கஜபதி மாவட்டத்தைச் சோ்ந்த மானஸ் சபாநாயக் என்பவரை கடந்த 21-ஆம் தேதியும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன், உதவி ஆய்வாளா்கள் கதிரேசன், இளையராஜா, மணிகண்டன் ஆகியோா் கொண்ட தனிப் படை போலீஸாா் கைது செய்து, தேனிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா் என்றாா் அவா்.