செய்திகள் :

`` `ஆள்மாறி கொன்றுவிட்டோம்' என்கிறார்கள்; காற்றில் பறக்கிறது சட்டம் ஒழுங்கு" - உதயநிதி ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

``24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதலமைச்சரைப் போல் காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா?"- எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை, கரூரில் வடமாநில இளைஞர் கொலை என தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க