செய்திகள் :

ஆஸி. பயிற்சியாளரை நியமித்த இராக்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தகுதிபெற வாய்ப்பு!

post image

இராக் அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையில் தகுதிபெறும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது.

இதனை முன்னிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் அர்னால்டை தலைமைப் பயிற்சியாளராக இராக் நியமித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்கு 6 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கிரஹாம் அர்னால்ட் அவரது தலைமையில் கடந்த 2022 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குச் சென்றது.

அந்தச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடன் ஆஸி. தோல்வியுற்றது. இறுதியில் ஆர்ஜென்டீனா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2026 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்றில் குரூப் பி அணியில் இராக் அணி இருக்கிறது.

8 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ள இராக் அணிக்கு அடுத்ததாக 2 போட்டிகள் உள்ளன. அதில் வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம்.

இராக் அணிக்கு மீதமிருக்கும் இரண்டு போட்டிகளும் அந்தப் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுடன் என்பது மிகுந்த சவால் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஜூன் 5 இல் தென்கொரியாவுடனும் அடுத்த 5 நாள்களில் ஜோர்டான் அணியுடனும் இராக் மோதவிருக்கிறது.

கடைசியாக இராக் 1986இல் உலகக் கோப்பையில் விளையாடியது. தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையில் தகுதிபெறும் முனைப்பில் காத்திருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது.இலங்கையிலிருந்... மேலும் பார்க்க

கேரளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமானது துடரும்!

மோகன்லாலின் துடரும் திரைப்படம் கேரளத்தில் அதிக வசூலை ஈட்டியுள்ளது.இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வ... மேலும் பார்க்க

ஏஸ் டிரைலர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!

சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு பிஎஸ்ஜி முன்னேறியதால் அந்த அணியின் 600 ஊழியர்களுக்கும் அதன் தலைவர் வெகுமதியை அறிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி ஆர்செனலை 3-1 என வீழ்த்தி... மேலும் பார்க்க

குபேரா - தனுஷ் கதாபாத்திர போஸ்டர்!

குபேரா படத்திற்கான தனுஷின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.பான் இந்... மேலும் பார்க்க

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ... மேலும் பார்க்க