செய்திகள் :

இங்கிலாந்து தப்பிச் செல்லும் முயற்சி தோல்வி: மும்பையில் சிக்கிய மலேசியா கிரிமினல்கள்!

post image

மலேசிய போலீஸாரால் தேடப்படும் கிரிமினல்களான ஸ்ரீதரன் சுப்ரமணியம், பிரதீப் குமார் செல்வராஜ், நவீந்திரன் ராஜ் குமரேசன் ஆகியோர் அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு வந்தனர். அவர்கள் மும்பையில் இருந்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றனர். விமானம் மான்செஸ்டர் விமான நிலையம் சென்றவுடன் அவர்கள் மூன்று பேரும் மலேசிய அரசால் தேடப்படும் கிரிமினல்கள் என்று இமிகிரேசன் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்பவேண்டும் என்ற விதிப்படி 3 பேரும் மீண்டும் மும்பைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களது விமானம் மீண்டும் மும்பை வந்த பிறகுதான் அவர்களுக்கு தாங்கள் வசமாக சிக்கிக்கொண்டோம் என்று தெரிய வந்தது. அவர்களை பிடிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர். அவர்களுடன் மூன்று பேரும் தகராறு செய்து சண்டையிட்டனர்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தங்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அவர்களை கூடுதல் பாதுகாப்பு படையினர் சேர்ந்து மடக்கி பிடித்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் வைத்திருக்கின்றனர்.

அவர்கள் மீண்டும் தப்பிச்செல்லும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பேரும் எப்படி மும்பை வந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 3 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மும்பை விமான நிலைய நிர்வாகம் மலேசிய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மலேசிய போலீஸார் அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை வந்து அவர்கள் மூன்று பேரையும் தங்களது காவலில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மூன்று பேரும் மலேசியாவில் கொலை, கொள்ளை என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு இது போன்ற கிரிமினல்களுக்கு எதிராக மலேசிய அரசு 'ஆப்ரேசன் ஜாக் ஸ்பாரோ' என்ற பெயரில் கிரிமினல்களை கைது செய்ய தொடங்கியது. இதையடுத்து மூன்று கிரிமினல்கள் மலேசிய போலீஸாரிடம் பிடிபடாமல் எப்படியோ மும்பைக்கு வந்துள்ளனர். அவர்கள் இங்கிலாந்து சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தனர். ஆனால் இப்போது மலேசிய சிறையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க