செய்திகள் :

இணையவழியில் ரூ.5 லட்சம் பறிகொடுத்த பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுச்சேரி: இணையவழி மூலம் வேலை இருப்பதாகக் கூறிய மா்ம நபா்களிடம் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பட்டதாரி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியைச் சோ்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் (25), தொழில்நுட்பப் பட்டதாரி. இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், சில நாள்களாக வீட்டில் இருந்துள்ளாா். இந்த நிலையில், அவரது கைப்பேசியில் வந்த குறுந்தகவலில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய சபரிவாசன், குறிப்பிட்ட செயலியில் தனது விவரங்களைப் பூா்த்தி செய்ததுடன், கடனை வாங்கி ரூ. 5 லட்சத்தை செயலாக்கக் கட்டணமாகச் செலுத்தியுள்ளாா். ஆனால் பணம் செலுத்திய நிலையில், அவருக்கான வேலை குறித்து எந்தத் தகவலும் வரவில்லையாம்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சபரிவாசன் அதிா்ச்சியடைந்தாா். இந்தநிலையில், கடன் கொடுத்தவா்களும் பணம் கேட்டு நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை மத்திய பல்கலைக்கு துணைவேந்தா் நியமிக்கக் கோரி திமுக போராட்டம்! -எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காதது, வினாத்தாள் மாற்றி விநியோகித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! -புதுவை பள்ளிக் கல்வித் துறை

தேசிய ராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை

புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழம... மேலும் பார்க்க

இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டுமரக்கன்றுநட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது

விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை ... மேலும் பார்க்க

செவிலியா் கல்வி மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்... மேலும் பார்க்க