செய்திகள் :

``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு

post image

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...

``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சிஸ்டத்தை மாற்றினால் மட்டுமே இந்த மாதிரியான விஷயங்கள் நிறுத்தப்படும்.

அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுனா
அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுனா

கனிம வளம் எடுக்கும் பணியை அரசே தனியாரிடமிருந்து எடுத்து நடத்த வேண்டும். அப்போதுதான் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். மேடையில் ஜகபர் அலியின் குடும்பத்தைப் பார்த்தபோது, நான் என் 5 வயதில் அம்மாவை இழந்து நின்றது ஞாபகத்துக்கு வருகிறது.

மறைந்த ஜகபர் அலியின் குடும்பத்துக்கு எங்களுடைய 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' (Voice of Commons) சார்பாக 15 லட்சம் ரூபாய் வழங்குகிறோம்.

விளையாட்டும் படிப்பும் சமமானது. ஒரு மாணவர் எட்டு மணி நேரம் படிப்பதுபோல, விளையாட்டு வீரரும் ஒன்பது மணி நேரம் மைதானத்தில் உழைக்கிறார்கள்" என்றார்.

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க