செய்திகள் :

"இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான்" - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

post image

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

நடிகை அதிதி ராவ்

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, "காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான்.

மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும்.

இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன்.

எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான்.

நடிகை அதிதி ராவ்

உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள்" என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா' நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினி... மேலும் பார்க்க

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்... மேலும் பார்க்க

Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' - பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!

ஷங்கரும் (தனுஷ்), வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தையும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அடி, தடி, உதை என கெத்து டிராகனாக வலம் வருகிறார் ... மேலும் பார்க்க