செய்திகள் :

'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

post image

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் முதல்வர் தரப்பு நிறைய கணக்குகளை தீட்டி வைத்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக கூட்டணி அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த கூட்டணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தங்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்த கட்சித் தலைவர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை முதல்வர் விஜய் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கோவளத்தில் நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்துக்கான அழைப்புகளும் முறைப்படி அத்தனை கட்சிகளுக்கும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர்,

திருமா

'தவெக அரசு அமைய நிறைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸை தவிர யாரும் எங்களை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் என அத்தனை பேரும் அவ்வபோது திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விசிக மீது ஆ.ராசாவை வைத்து திமுக கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அதற்கு அமைச்சர் வன்னி அரசுவும் காட்டமாக பதில் கூறி வருகிறார். அதேமாதிரி, கம்யூனிஸ்ட்டுகள் குறித்தும் முரசொலியில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை திமுக வெளியிட்டு வருகிறது. இதற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தக்க பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம் மதிமுகவும் ஐ.யூ.எம்.எல் உம் பொதுக்குழுவை கூட்டி திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டன. திமுக மீது ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தி அதிகமாகி முரண்பாடுகள் முற்றியிருக்கும் இந்த சூழலை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

இந்த சமயத்தில் தோழமை கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து கூட்டம் போடுவதன் மூலம், 'நாமெல்லாம் ஒன்றாக நிற்கலாம். திமுக கூட்டணி போல அல்லாமல் உங்களுக்கான உரிய மரியாதை எப்போதும் இங்கே கிடைக்கும்' என உறுதிப்படுத்தவிருக்கிறார்.

பெ.சண்முகம்

அதேமாதிரி, அரசு நிர்வாகரீதியாகவும் உங்கள் தரப்பு கருத்துகளை எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறவிருக்கிறார். இந்த தோழமைக் கட்சிகளை இடைத்தேர்தலுக்குள் ஒரு `முழு கூட்டணியாக' மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதன்மூலம் தேர்தல் களத்தில் திமுகவை இன்னும் தனிமைப்படுத்தி பலவீனமாக்க வேண்டுமென நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தல்தான் இந்த கூட்டம்' என்கின்றனர்!

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க