செய்திகள் :

"இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில்; அடுத்து பெட்ரோல், டீசல்" - கேஸ் விலை உயர்வு பற்றி ராகுல்

post image

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிலிண்டர்
சிலிண்டர்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வணிக சிலிண்டரின் விலை உயர்வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், "தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வு வரும் என்று நான் சொல்லியிருந்தேன். இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிந்த உடன் வணிக சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில். அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயரும்.

காங்கிரஸ் ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.993 உயர்த்தியது வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சிலிண்டர் விலை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% அதிகரித்திருக்கிறது.

தேநீர்க் கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, இனிப்புக் கடை என அனைவரின் சமையலறைச் சுமையும் அதிகரித்துள்ளது. அடுத்து இது உங்கள் தட்டையும் (உணவையும்) பாதிக்கும்" என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திக் திக்... மூடில் திமுக தலைமை... ''என்னதான் ஆச்சு?!"

“தேர்தல் களம் என்றால் தி.மு.க-வினரை போல சுற்றி சுழன்று பணியாற்றுபவர்கள் இருக்க முடியாது” என்று எதிர்கட்சியினரே சிலாகிக்கும் அளவுக்கு தி.மு.க வினரின் தேர்தல் பணிகள் மெச்சத்தக்க வகையிலேயே இருக்கும். ஆனா... மேலும் பார்க்க

தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' - எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளை உணர்வு ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் அக்கட்சியின் பிரசாரப் பிரிவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத... மேலும் பார்க்க

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்தது.இரண்டு கட்டங்க... மேலும் பார்க்க