செய்திகள் :

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

post image

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

சிம்ரன்
சிம்ரன்

இந்நிலையில், தான் வாக்களித்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சிம்ரன் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நாடகங்களைத் தவிர்த்து யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம்.

இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல. நாம் வாக்களிக்கும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது எனது உரிமை மட்டுமல்ல, அது எனது கடமையும்கூட" என்று பதிவிட்டிருக்கிறார்.

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில்... மேலும் பார்க்க

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடி... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமி... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க