விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில...
இந்தியப் பங்குச் சந்தை: வீழ்ச்சியா, வாய்ப்பா? - உங்கள் பணம் எங்கே செல்கிறது?
‘சென்செக்ஸ் 83,000 புள்ளிகள்’, ‘நிஃப்டி 25,500-ஐ நெருங்குகிறது’ – இது போன்ற செய்திகளைத் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் தினமும் பார்க்கிறோம். சில நாட்கள் சந்தை ராக்கெட் வேகத்தில் ஏறும்; சில நாள்கள் திடீரெனச் சரியும். இதைப் பார்க்கும் நம்மில் பலருக்கு, ‘இது நமக்கான விளையாட்டு இல்லை’ என்ற எண்ணம் தோன்றும். ‘சரியான நேரத்தில் முதலீடு செய்யத் தெரியவில்லையே’ என்ற குழப்பமும், பயமும் நம்மில் பலரை முதலீட்டிலிருந்து தள்ளியே வைத்திருக்கும்.
ஆனால், இந்தக் குழப்பமான நேரத்தில்தான் புத்திசாலி முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள். அது எப்படி?
தற்போதைய நிலை என்ன? பயப்பட வேண்டுமா?

கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தை ஒருவிதமான மந்தநிலையில் இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதும், லாபத்தை எடுப்பதும் இதற்கு முக்கியக் காரணம். சந்தை இறங்கும்போது, ‘ஐயோ, நம் பணம் போய்விடுமோ’ என்ற பயத்தில், கையிலிருக்கும் நல்ல பங்குகளையும் நஷ்டத்திற்கு விற்கிறோம். இதுதான் நாம் செய்யும் முதல் தவறு.
உண்மையில், சந்தையின் இந்தச் சிறிய இறக்கங்கள், நல்ல நிறுவனப் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கான சிறந்த 'வாய்ப்பு' என்கிறார்கள் அனுபவமிக்க முதலீட்டாளர்கள்.
முதலீட்டின் எதிர்காலம்: பணம் எங்கே வளரப்போகிறது?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டேட்டா எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தது? இன்று அதுவே நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. இதுதான் வளர்ச்சி. இதேபோன்ற வளர்ச்சிதான் இந்தியப் பொருளாதாரத்தின் பல துறைகளில் நடக்கவிருக்கிறது.

1. தொழில்நுட்பத் துறை: செயற்கை நுண்ணறிவு (AI), 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங் என தொழில்நுட்பத் துறை அடுத்த கட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது. இனி எல்லாமே டிஜிட்டல்தான். இந்தத் துறையில் முதலீடு செய்வது, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் நம்மை ஒரு பங்குதாரராக மாற்றும்.
2. பசுமை ஆற்றல்: உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சோலார், காற்றாலை போன்ற பசுமை ஆற்றல் துறைகளில் இந்திய அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்துகிறது. இது அடுத்த பத்து ஆண்டுகளுக்கான மிகப்பெரிய வளர்ச்சித் துறை.
3. சுகாதாரத் துறை: ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. புதிய மருத்துவமனைகள், தரமான மருந்துகள், காப்பீடு என இந்தத் துறை தொடர்ந்து வளரக்கூடியது.
4. உள்கட்டமைப்பு: புதிய சாலைகள், விமான நிலையங்கள், ஸ்மார்ட் நகரங்கள் என இந்தியாவின் அடையாளமே மாறிவருகிறது. இது சிமென்ட், ஸ்டீல் போன்ற பல துணைத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
நான் என்ன செய்ய வேண்டும்?
‘இந்தத் துறைகளையெல்லாம் கண்காணித்து, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது கடினமாயிற்றே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒரு சாதாரண முதலீட்டாளராக, நாம் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கணிப்பது சாத்தியமில்லை.
அதற்குத்தான் நிபுணர்களின் வழிகாட்டுதல் தேவை. எந்தத் துறையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், சந்தை சரியும்போது என்ன செய்ய வேண்டும், லாபத்தை எப்போது வெளியே எடுக்க வேண்டும் என்பதை ஒரு நிதி ஆலோசகர் சரியாக வழிகாட்டுவார்.
நிபுணருடன் ஒரு கலந்துரையாடல்!
பணம் சேர்ப்பது உங்களின் ஆசையா? பங்குச் சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் சிறப்பு வெபினாரில் கலந்துகொள்ளுங்கள்.
இந்த வெபினாரில், பங்குச் சந்தை நிபுணர் பாலாஜி வைத்யநாத் (CEO & CIO, NAFA PMS) கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இவர் பங்குச் சந்தையில் சுமார் இருபது வருட கால அனுபவம் கொண்டவர். சந்தையின் கரடுமுரடான பாதைகளிலும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு. அவரின் வழிகாட்டுதல், சந்தை குறித்த உங்கள் பயத்தைப் போக்கி, தெளிவான பாதையைக் காட்டும்.

தலைப்பு: இந்திய பங்குச் சந்தை & முதலீட்டின் எதிர்காலம்
நாள்: நவம்பர் 9, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11:00 - 12:30 இந்திய நேரம்
பேச்சாளர்: பாலாஜி வைத்யநாத், CEO & CIO, NAFA PMS
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 75 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.
பதிவு செய்ய: https://labham.money/webinar-nov-09-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov09_2025

















