அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாக...
ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார்.
ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார்.
எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார்.
அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், "ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.
















