அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாக...
தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்" - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்!
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்றப் படத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாகவும், அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நாயகியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் குறித்து நடிகை ராஷ்மிகா தன் எக்ஸ் பக்கத்தில், ``தனக்குப் பிடித்த பெண்ணாக மாறும் அத்தனை தோழிகளுக்கும் ஓர் காதல் கடிதம் "உனக்கு என்ன தெரியும்?" என்று கேள்வி கேட்கப்பட்டும், இன்று தனக்கு என்ன வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்த பெண்ணாக வளர்ந்த ஒவ்வொரு தோழிக்கும்...
நீ பெரும் தூரத்தைக் கடந்து வந்துவிட்டாய், பெருமையோடு உன்னை நீயே இறுக்கமாக அணைத்துக்கொள்!
அதே போல், வழிநடத்த நினைக்காமல், பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்... உங்கள் அன்புதான் ஒவ்வொரு பெண்ணும் தன் குரலைக் கண்டுபிடிக்க தைரியம் கொடுத்தது.
இந்தப் படம், சொல்லப்படாத அத்தனை உணர்ச்சிகளுக்காகவும் - கட்டுப்படுத்தாமல், சுதந்திரம் கொடுக்கும் அன்புக்காக, தன்னைத் தானே தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொண்டு, காயங்களை ஆற்றிக்கொள்ளும் இதயங்களுக்காகவும், உங்களுக்கு நீங்கள் உண்மையானவர்களாக மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான துணிச்சலுக்காகவும் எடுக்கப்பட்டது.

'தி கேர்ள்ஃப்ரெண்ட்' பயணத்தில், நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள், புரிந்துகொள்ளப்படுகிறீர்கள் என்று உணர்வதற்கும், உங்கள் பலத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காகவும், என் மனதை, என் உணர்வுகளை, என் பலவீனங்களை எல்லாவற்றையும் இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறேன்.
இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை இன்னும் இறுகப் பிடித்துக்கொள்ளவும், உங்களை நீங்களே மீண்டும் காதலிக்கவும் செய்தால், இந்தப் படத்துக்கான வெற்றியே அதுதான்.
மௌனத்தில் இருந்து வலிமைக்கான ஒவ்வொரு பயணத்திற்கும்... அன்போடும் மரியாதையோடும் கூடவே நின்றவர்களுக்கும் இது ஓர் காதல் கடிதம்.
தி கேர்ள்ஃப்ரெண்ட் இப்போது திரையரங்குகளில். இது உங்களுக்காகவே! காதல், தைரியம் மற்றும் உருமாறும் இந்தப் பயணத்தை வந்து பாருங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















