செய்திகள் :

Bahubali: ``ரூ.120 கோடி பட்ஜெட்; மற்றொரு கோணத்தில் உருவாகும் பாகுபலி" - இயக்குநர் ராஜமௌலி அறிவிப்பு!

post image

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் பாகுபலி.

இரண்டு பாகங்காளாக வெளியான இந்தப் படம் 'பாகுபலி: 'தி எபிக்' என திருத்தப்பட்ட ஒரே பாகமாக இன்று (31-ம் தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பாகுபலி; தி எபிக் அறிவிப்பு வெளியானதிலிருந்து பாகுபலியின் மூன்றாவது பாகம் வெளியாகவிருக்கிறது என்ற வதந்தி பரவி வந்தது.

ராஜமௌலி, பிரபாஸ்
ராஜமௌலி, பிரபாஸ்

இந்த நிலையில், பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோருடன் இயக்குநர் ராஜமௌலி தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார்.

அதில், ``‘பாகுபலி: தி எடர்னல் வார்’ என்ற அனிமேசன் படத்தின் டீசர் வெளியிட்டிருக்கிறோம். இது பாகுபலியின் 3-வது பாகமல்ல. இது பாகுபலி உலகின் தொடர்ச்சி.

இது ஒரு அனிமேஷன் படம். அமேசானில் 2D அனிமேஷனை வெளியிட்டோம். ஆனால், இது 3D அனிமேஷனாக படமாக வெளியாகும். திறமையான அனிமேஷன் இயக்குனர் இஷான் சுக்லா என்னைச் சந்தித்தார்.

அவர் பாகுபலி கதையை வேறொரு கோணத்தில் பார்க்கும் யோசனையை கொண்டு வந்தார். அந்த யோசனை எனக்கு பிடித்திருந்தது.

அதனால் அதே கதாபாத்திரங்கள், ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாகுபலி: தி எடர்னல் வார் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.

அனுஷ்கா - பாகுபலி 2
அனுஷ்கா - பாகுபலி 2

இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.120 கோடி" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய ராஜமௌலி, ``ரூ.120 கோடி என்பது பாகுபலி முதல் பாகத்தின் பட்ஜெட்.

'பாகுபலி பகுதி 1' படத்தின் ஆரம்ப பட்ஜெட்டைப் போலவே, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்திய அனிமேஷன் படமாக இது இருக்கும். இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருந்தால் அது வெற்றிப்பெற்றுவிடும்." எனக் குறிப்பிட்டார்.

Rashmika: ``சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" - ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்' திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்', `குபேரா', `தம்மா' என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட்... மேலும் பார்க்க

Rishab Shetty: ``அன்புக்கும், சிரிப்புக்கும் நன்றி" - ரிஷப் ஷெட்டியின் தீபாவளி | Photo Album

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள் மேலும் பார்க்க

''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' - நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா - நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். அக்டோபர் 21-ம் தேதி வெளியாக... மேலும் பார்க்க

Kantara Chapter 1:``தெய்வா போல வேஷம் போடாதீங்க" - காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தல்

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் ப்ரீகுவலாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா... மேலும் பார்க்க

Kantara: Chapter 1 - ஆடை வடிவமைப்பாளர் பகிர்ந்த மிரள வைக்கும் படங்கள் | Photo Album

Kantara: Chapter 1Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: C... மேலும் பார்க்க