நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
Rashmika: ``சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" - ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்' திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்', `குபேரா', `தம்மா' என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

`தி கேர்ள்ஃப்ரண்ட்' படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த நேர்காணல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா பேசுகையில், ``இருபது முதல் முப்பது வயது வரை தலையைக் குனிந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஏனென்றால் சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு நமக்கு பணம் வேண்டும்.
முப்பது முதல் நாற்பது வயது வரை வேலையில்தான் வாழ்க்கை நகரும். நாற்பது வயதில் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை." என்றவர், ``நான் இன்னும் தாயாகவில்லை.

நான் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பேன் என்பதும் எனக்கு தெரியும்.
இப்படியான விஷயங்களை நான் நேசிக்கிறேன். பிறக்காத அந்தக் குழந்தைகளுக்காக பல விஷயங்களையும் யோசிக்கிறேன்.
நான் அவர்களுக்கு அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். போருக்கு செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவர்களுக்காக நான் செல்ல வேண்டும்." என்றபடி முடித்துக் கொண்டார்.

















