செய்திகள் :

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

post image

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை சீசனில் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பைச் செய்த பிரதிகா ரேவால், வங்காள தேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

Team India
Team India

கடந்த ஞாயிறு அன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் அணி தங்களது முதல் உலகக் கோப்பையை வென்றது. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட வீல் சேரில் அமர்ந்தபடியே கலந்துகொண்டார் பிரதிகா ரேவால்.

சமீபத்தில் சி.என்.என் 18 செய்திதளத்துக்கு அளித்த பேட்டியில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் அவருக்கான பதக்கத்தைப் பெறுவதை உறுதி செய்ததாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.

பிரதிகா ரேவாலுக்குப் பதிலாக இந்திய அணியில் இணைந்த ஷெஃபாலி வெர்மா, இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவருடன் அணியில் இடம்பெற்றிருந்த 15 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இடையிலேயே தொடரிலிருந்து வெளியேறியதால் பிரதிகா ரேவாலுக்கு பதக்கம் வழங்கப்படவில்லை.

Pratika Rawal with Modi
Pratika Rawal with Modi

2003 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின் போது, ஆஸ்திரேலியாவின் ​​ஜேசன் கில்லெஸ்பி காயமடைந்தார், அவருக்கு பதிலாக நாதன் பிராக்கன் சேர்க்கப்பட்டார். அந்த சந்தர்ப்பத்திலும், பிராக்கன் பதக்கம் பெற்றார், கில்லெஸ்பி பதக்கம் இல்லாமல் முடித்தார்.

பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் உடனான சந்திப்புகளின்போது மற்றொரு சப்போர்டிங் ஊழியர் பிரதிகாவுக்கு தனது பதக்கத்தை வழங்கியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் பேசிய பிரதிகா, "பிரதிகாவுக்கு பதக்கம் பெற ஏற்பாடு செய்ய விரும்புகிறேன் என்று ஜெய் ஷா எங்கள் மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதிகா உலகக் கோப்பை சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் 308 ரன்கள் சேர்த்திருந்தார். சராசரி 51.33. ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறகு இரண்டாவது அதிக ரன் அடித்த வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர... மேலும் பார்க்க

``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜெமிமா

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட... மேலும் பார்க்க

``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றா... மேலும் பார்க்க