செய்திகள் :

Allu Sirish: `வருவேன் உன் பின்னே' - அல்லு அர்ஜூன் தம்பி அல்லு சிரிஷுக்கு நிச்சயதார்த்தம்!

post image

அல்லு அர்ஜூனின் சகோதரரான அல்லு சிரிஷுக்கு நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்திலிருந்து அல்லு சிரிஷும் கடந்த 2013-ம் ஆண்டு திரைத்துறைக்குள் வந்தார்.

Allu Sirish
Allu Sirish

`கௌரவம்' என்ற தமிழ் தெலுங்கு பைலிங்குவல் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த அல்லு சிரிஷ் கடைசியாக பட்டி' படத்தில் நடித்திருந்தார்.

அல்லு சிரிஷுக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான நயனிகாவுக்கும் நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், ``நான் என் வாழ்க்கையின் காதலியான நயனிகாவுடன் மகிழ்ச்சியாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கோனிடெல்லா மற்றும் அல்லு குடும்பத்தினரும், அவர்களின் நண்பர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அல்லு அர்ஜூன், ராம் சரண், வருண் தேஜ் ஆகிய டோலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அல்லு சிரிஷுக்கும் நயனிகாவுக்கும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Bahubali: ``ரூ.120 கோடி பட்ஜெட்; மற்றொரு கோணத்தில் உருவாகும் பாகுபலி" - இயக்குநர் ராஜமௌலி அறிவிப்பு!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் பாகுபலி. இரண்டு பாகங்காளா... மேலும் பார்க்க

Rashmika: ``சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" - ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்' திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்', `குபேரா', `தம்மா' என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட்... மேலும் பார்க்க

Rishab Shetty: ``அன்புக்கும், சிரிப்புக்கும் நன்றி" - ரிஷப் ஷெட்டியின் தீபாவளி | Photo Album

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள் மேலும் பார்க்க

''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' - நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா - நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். அக்டோபர் 21-ம் தேதி வெளியாக... மேலும் பார்க்க