'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
BB Tamil 9: ``மத்தவுங்கள பத்தி பேசுறதுக்கு நீங்க யாரு சார்'' -திவாகரை கடுமையாகப் பேசிய விஜய் சேதுபதி
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் - சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ.1) வெளியாகி இருந்த இரண்டாவது புரோமோவில் விஜய் சேதுபதி, " எல்லோரும் நல்லா இருக்கிங்களா? கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது.

உங்களுக்கு தெரிய வேணாமா? பேசுனா உங்களுக்கு புரியுமா? இல்ல உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா? பாரு, வினோத், ரம்யா, திவாகர் உங்களுக்கு கேட்குதா?" என விஜய் சேதுபதி கையில் ஸ்பீக்கரை வைத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் பாணியிலேயே கத்தினார்.
தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில், "எதுக்கு இவ்வளவு சத்தம் பாரு? ஒருத்தவுங்க அமைதியாக இருக்கனும்'னு நினைக்கிறீங்க, நீங்க ஏன் அமைதியா இல்ல" என விஜய் சேதுபதி கோபமாக பார்வதியைக் கேட்கிறார்.

உங்களுக்கு கருத்தை சொல்லணும்'னா அதை சொல்லுங்க சார். அதைவிட்டுட்டு தராதரம் பத்தி எதுக்கு பேசுறீங்க. மத்தவுங்க தகுதி தராதரம் பத்தி பேசுறதுக்கு நீங்க யாரு சார்" என்று திவாகரை கடுமையாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.