தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264
`மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் குழந்தை பிறந்துள்ளது!’ - அறிவித்த ஜாய் கிறிசில்டா
நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவுக்கும் இடையிலான பிரச்னை ஊர் அறிந்ததே.
ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் ரங்கராஜ் ஜாயுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ஜாய், ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும் ஆனால் தற்போது தன்னுடன் சேர்ந்த வாழ மறுப்பதாகவும் கூறி போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து இருவருக்குமிடையிலான பிரச்னை வளர்ந்து கோர்ட், மகளிர் ஆணையம் வரை வந்து விட்டது.

இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திக்க உள்ளதாக கூறியிருக்கிறார் ரங்கராஜ்.
மேலும் சில தினங்களுக்கு முன் தனக்கும் வயிற்றிலிருக்கும் தன் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவாக மாதம் ஆறரை லட்சம் தர ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஜாய் கிறிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஜாய் கிறிசில்டா தனது சமூக வலைதளபக்கத்தில், `மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது!’ என அறிவித்துள்ளார்.



















