மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
BB TAMIL 9: DAY 26: ‘யார்ரா அந்தப் பையன்?’ டாஸ்க்; 'யாருக்கு ஆதரவு அதிகம்' விக்ரம் - திவாகர் போட்டி!
“நீங்க வெளிய வேணா நல்லவங்களா இருந்துக்கங்க. ஆனா வீட்டுக்குள்ள இருக்கணும்னா போட்டி மனப்பான்மையோட ஆட்டத்தை ஆடணும். டிப்ளமஸி தேவையில்லை. புரிஞ்சுதா. இது என் ரிக்வெஸ்ட் இல்ல. டிமாண்ட்” என்று சர்வைவல் ஆஃப் தி ஃபி்ட்டஸ்ட் பாடத்தைப் போட்டியாளர்களுக்கு நடத்தினார் பிக் பாஸ்.
‘ஐ வாண்ட் மோர் எமோஷன்’ என்பது இதன் பொருள்.
‘யார்ரா அந்தப் பையன்?’ டாஸ்க்கில் தன்னைப் பற்றி விக்ரம் சொன்னதால் அவரிடம் வம்பிழுத்த திவாகர் “க்ருப்புல இல்லைன்னா நாமினேட் ஆகிடுவோம்ன்னு பயமா?” என்று ஈகோவைத் தூண்டி விட, எப்போதும் பொறுமையாக இருக்கும் விக்ரம் கோபமடைந்து, “பயம்ன்னுலாம் சொல்லாத. நாமினேஷன் பாஸ் வேணும்ன்னு நான் கேட்டேனா.. எது வேணா சொல்லு. பயம்ன்னு சொல்லாத" என்று எச்சரிக்க, “ரெண்டு பேரும் நிப்போம். மக்கள் யாருக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு பார்ப்போம்” என்று எதிர் சவால் விட்டார் திவாகர். (மனுஷனுக்கு என்னவொரு கான்பிடன்ஸ்?!)

இதே டாப்பிக்தான் வீடெங்கும் ஓடிக் கொண்டிருந்தது. “பாரு வேலை செய்யற மாதிரி நடிக்கறான்னு இருக்கறதைத்தானே சொன்னேன?” என்று சொல்லிக் கொண்டிருந்தார் கனி. “உண்மையாவே வேலை செய்றவங்களைப் பத்தி தப்பா சொல்ல மாட்டேன். யாரைச் சொல்லவும் எனக்கு பயம் கிடையாது. வெளியே நான் ரவுடி பொம்பளை. இங்க கட்டுப்படுத்திக்கிட்டு உக்காந்திருக்கிட்டிருக்கேன்” என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா. (நான் உனக்கு மேல ரவுடி என்பது இதன் செய்தியா?!)
எப்போது வேண்டுமானாலும் எவிக்ட் ஆகி விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த வியன்னாவின் ஸ்மார்ட்னஸ் இப்போது மெல்ல மெல்ல பதிவாகிக் கொண்டிருக்கிறது.
‘அப்படி வா செல்லம்’ என்று பிக் பாஸே பாராட்டிக் கொண்டிருக்கிறார். “நாம நடந்துக்கற விஷயங்களால நம்ம காரெக்டர் வெளியே தெரியும். வந்த புதுசல கான்ஷியஸா இருந்தாங்க. இப்ப இல்லை. திவாகரை கிண்டல் பண்ணி யூஸ் பண்ணிக்கறாங்க” என்றெல்லாம் அனலைஸ் செய்து கொண்டிருந்தார்.
நாள் 26. ‘என்ன வேணா நடக்கட்டும். நான் சந்தோஷமா இருப்பேன்’ என்று கம்ரூதீன் பாடிய பாடலையே வேக் அப் சாங்காக போட்டார் பிக் பாஸ். கடந்து வந்த பாதையில் இருவர் கதை சொல்ல வேண்டும். சபரி மற்றும் எஃப்ஜே.
“இதுக்கு மேல வேற பாதையே கிடையாது. சென்னைல இருக்கற எல்லா பாதையையும் சொல்லிட்ட” என்று பிறகு விக்ரம் கிண்டலடித்தபடியாக, தன் வளர்ச்சிப் பாதையை நீண்ட நேரம் சொல்லி மக்களைப் போரடித்தார் எஃப்ஜே. இதைச் சகித்துக் கொள்ளாத பாரு, பிடிக்காத சினிமாவை விட்டு பாப்கார்ன் வாங்க உலாத்துவது போல பாத்ரூம் பக்கம் உலவிக் கொண்டிருந்தார். “என்னா கதை கதையா பேசி கொல்றான். நான்லாம் என் கதையை இப்படி சொல்லியிருந்தா என்னவாகியிருக்கும்?” என்று பிறகு மற்றவர்களிடம் சலித்துக் கொண்டிருந்தார்.

“எனக்கெல்லாம் இருபது வருஷ கதை இருக்கு” என்று ஜெர்க் தந்தார் வினோத். “நயன்தாரா படத்துலயே நான் வில்லனா பண்ணியிருக்கேன். அதையெல்லாம் சொல்லியிருப்பேன்” என்றார் கம்ருதீன். (அங்கயும் வில்லன்தானா?!)
அடுத்து வந்த சபரிக்கும் இதே நிலைமைதான். என்னதான் தொடையைத் தட்டி “ஆமாண்டா.. நான் விஜய் டிவி பிராடக்தாண்டா’ என்று சொன்னாலும் இவருடைய கதையும் சலிப்பாக இருந்ததாக மக்கள் சொன்னார்கள்.
டிவி தொடர்களில் இவர் எதிர்கொண்ட நிராகரிப்பு சவால்கள் மற்றும் நண்பன் செய்த துரோகம் போன்ற பகுதிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கதை சொல்வதற்கு முன்னால் “நான் பிஸிக்கலி, மென்ட்டலி லோவா இருக்கேன். எனக்கு ஹக் தேவைப்படுது” என்று சபரி சொன்னவுடன் பெரும்பான்மையான மக்கள் ஓடிச் சென்று ஆதரவு தந்தார்கள். பாரு, திவாகர் கூட்டணி செல்லவில்லை. (டேய்.. டேய்.. இந்த நடிப்புல்லாம் எங்களுக்கும் தெரியுண்டா!)
ஒருவழியாக கதை நேரம் முடிந்ததும், ‘இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள்’, சலிப்பாகச் சொல்லியவர்கள், சிறப்பாகச் சொல்லியவர்கள் ஆகியோரைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.
இந்தத் தேர்வில் கலை மற்றும் கனி ஆகிய இருவரும் சிறப்பாகச் சொல்லியதாக பெயர் வாங்கினார்கள். இருவருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தது. கனி தொடர்ந்து நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆவதால் காண்டான பார்வதி “யாரு.. சாமி. இவன்.. எங்க இருந்து வந்திருக்கான்" என்கிற ரேஞ்சிற்கு ஆச்சரியப்பட்டார். (டேய்.. எப்புட்றா?’ மோமெண்ட்!)

லாக்கர் டாஸ்க். ‘இதுதான் கடைசி. இனி டாஸ்க் கிடையாது. ரெண்டு வீடும் உள்ளே போகலாம்’ என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு நின்றார்கள். பஸ்ஸர் அடித்தவுடன், கலவர சமயத்தில் கடைக்குள் புகுந்து பொருட்களை லவட்டிச் செல்லும் வேகத்தோடு மக்கள் பாய “நார்மலா எடுங்க. இனிமே டாஸ்க் இல்லைன்னு சொன்னேனே?” என்று வெறுப்பேற்றினார் பிக் பாஸ். (ஜோக் அடிக்கறாராமாம்!)
மளிகைப் பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து மக்கள் ஆசுவாசமாக உட்கார்ந்தவுடன் “சோறு சாப்பி்ட்டீங்களே.. அதுக்கேத்த மாதிரி வேலை செஞ்சீங்களா?” என்று கேட்கிற முதலாளி மாதிரி பிக் பாஸ் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார்.
“இந்த ஷோல முழுத் திறமையோட ஆடுகிற போட்டியாளர்கள் மட்டும் மனச்சாட்சியோட செயல்பட்டு, டிவியோட இடது பக்கம் வந்து உக்காருங்க” என்று அறிவிப்பு வர, “எஃப்ஜே, சபரி, கலை, வியன்னா, திவாகர், சுபிக்ஷா, கனி, ரம்யா ஆகியோர் எழுந்து வந்தார்கள். மற்றவர்கள் தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

“எதிர் பக்கத்துல இருக்கறவங்கள்ல யாரு நியாயமா ஆடினதுன்னு சொல்லுங்க” என்று பிக் பாஸ் கேட்க பிரவீன் உள்ளிட்ட சில பெயர்கள் வந்தன. “எல்லோரும் எனக்கு சத்தியம் செஞ்சு கொடுங்க. இனிமே ‘என் முழுமையான திறமையோடு ஆட்டத்தை ஆடுவேன்னு.. முடியாதவங்க இப்பவே உக்காந்துடுங்க. ஏன்னா.. இனி வர்ற போட்டிகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையா இருக்கும்.
டிப்ளமஸியா ஆடாதீங்க. அதனால இந்த வாரம் பெஸ்ட், வொர்ஸ்ட் கிடையாது. முதிர்ச்சியோட ஆடுங்க. வெளிய நலலவங்களா இருந்துக்கங்க. இந்த வீட்ல கருத்து சொல்லியே ஆகணும். இதுவே என் கட்டளை. கட்டளையே சாசனம்” என்று ராஜமாதாவாக உத்தரவு தந்தார் பிக் பாஸ்.
வெறுமனே செட் பிராப்பர்டிகளாக உலவிக் கொண்டிருக்கும் துஷார், அரோரா, கலை, வியன்னா போன்றவர்கள் இனி என்ன செய்வார்கள்?!



















