செய்திகள் :

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா?" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3' செய்திகள்!

post image

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவரின் உரையில், ``இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சமநிலையற்றதாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தவர் போலவும் மற்றொருவர் அவருக்கு கீழ் இருப்பவர் போலவும் இருக்கிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு டாலரின் மதிப்பு முக்கியம் என்றால், அதற்கான தீர்வு இந்திய மக்களிடம் உள்ள தரவுதான். எனவே, அந்தத் தரவை அமெரிக்காவிற்கு வழங்குவதற்குப் பதிலாக, அதை வைத்து நாம் அமெரிக்காவுடன் சம உரிமையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அடிமையாகச் சரணடையக் கூடாது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை பிரதமர் மோடியோ அல்லது அவரது அமைச்சர்களோ உறுதிப்படுத்தாத உண்மை, இது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. ஆனால், இப்போது நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நமது பிரதமர் அதை வேடிக்கைப் பார்க்கிறார்.

அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேபோல், நம் விவசாயிகளையும் நாம் பாதுக்க வேண்டுமல்லவா... எனவே, பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவைக் கருதும் ட்ரம்ப்பிடம், பாகிஸ்தானுக்கு சமமாக மாற்றப்பட மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து, நம் விவசாயிகளின் நலன் காக்க வலியுறுத்தியிருப்போம்.

இந்தியாவின் உணர்வுபூர்வமான விவசாயச் சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம், பிரதமர் மோடி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்... எங்கள் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு கதவைத் திறந்துவிட்டீர்கள்" எனக் காட்டமாகப் பேசினார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``முதலில், இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ கூடிய எந்த மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவில்லை" என பதிலளித்தார்.

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி க... மேலும் பார்க்க

புதுச்சேரி: போலீஸ் தடியடி... எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! - நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம்புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள... மேலும் பார்க்க

விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்

அதிமுக Vs அமமுக மல்லுக்கட்டுதேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்... மேலும் பார்க்க

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்‘வாவ்’ வியூகம் 5வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக' என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க