செய்திகள் :

இந்தியா - அமெரிக்கா வரி: "கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்" - காங்கிரஸ் விமர்சனம்

post image

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``வாஷிங்டன் டி.சி-யிலிருந்துதான் 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த சமீபத்திய தகவல்களையும் வாஷிங்டனில் இருந்தே அவர் அறிவிக்கிறார்.

முழு விவரங்களும் இன்னும் வராத நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தையும் வாஷிங்டனில் இருந்தே அவரே அறிவித்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடி மீது அதிபர் ட்ரம்பிற்கு ஒரு பிடி இருப்பதாகத் தெரிகிறது. இப்போது ட்ரம்புடன் வழக்கமான கட்டிப்பிடிக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும், அவருடன் சேர்ந்து காணப்படுவதற்கே இப்போது மோடி வெட்கப்படுகிறார்.

கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக இது ஒப்பந்தங்களின் தந்தை என்று சொல்லுமளவிற்கு ஒரு சிறந்த ஒப்பந்தமாக இருக்க முடியாது" என்றார்.

ஜெய்ராம் ரமேஷ்

அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், ட்ரம்ப், மோடியுடன் பேசியதாகவும், இது குறித்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள் என்றும் அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியா அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிபர் ட்ரம்ப்போ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அமெரிக்க அதிகாரிகளோ சொல்லித்தான் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது அதுவே ஒரு வழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது" என்றார்.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க