செய்திகள் :

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

post image

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க இந்திய நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே

ஒருபுறம் அதிவேக ரயில்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களின் எண்ணிக்கையைச் சுருக்குவது முரணாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், இது ரயில்வே துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே

போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்போதுள்ள ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதோடு, ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடும் என்றும், இது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' - புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா 'தெலுங்கானா ராஷ்டிர சேனா' என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார். TRSதெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட... மேலும் பார்க்க

கோவை: ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்... மேலும் பார்க்க

ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், 'அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)'. 'The Dawn Newspaper' தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து... மேலும் பார்க்க

``ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!"- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க