செய்திகள் :

"இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' - 'பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான்

post image

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பராசக்தி' படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், " 'பராசக்தி'யை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது.

பராசக்தி
பராசக்தி

இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது.

மொழிப்போர் பின்புலத்தை அந்த உணர்வை எடுத்துக்கொண்டு சுவைக்காக திரைக்கதையை அதற்கேற்றார் போல மாற்றியுள்ளனர்.

படத்தில் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் பங்களிப்பு, எதிர் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன் பங்களிப்பு, தம்பி அதர்வா பங்களிப்பு நேர்த்தியாக இருந்தது.

அதிலும் என் தம்பி சிவா, இறுதியில் ’தமிழ் வாழ்க’ என கையை உயர்த்திச் சொல்லும்போது நானே சொல்வதுபோல்தான் இருந்தது. இந்த சீமான் தான் அந்த செழியன்.

பராசக்தி விமர்சனம் | Parasakthi Review
பராசக்தி விமர்சனம் | Parasakthi Review

'பராசக்தி' ஒரு நல்ல படம். மொழிப்போரை அப்படியே காட்டவில்லை, அதேநேரம் மொழி உணர்வை சிதைக்கவில்லை" என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார்.

"அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார்!" - இயக்குநர் இரா. சரவணன்

தணிக்கை சான்றிதழ் சிக்கல் தடையைத் தாண்டி கடந்த 10-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் சிவகார்த்திகேயன் நடித்... மேலும் பார்க்க

டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம்!

படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், ஜானர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரவி மோகன், இந்தாண்டும் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கிறார். இப்போது நடிப்போடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் கூடுதல் புரொம... மேலும் பார்க்க

"விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால்.! - இயக்குநர் சுதா கொங்கரா

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது.அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'ப... மேலும் பார்க்க

"என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம்" - அஜித் குமார்

24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ... மேலும் பார்க்க

``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை" - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'.லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.... மேலும் பார்க்க