இரண்டு சம்பளம் வாங்கும் கணவன்-மனைவியா? 45 வயதில் ரிட்டைர்மென்ட் பெறுவது எப்படி?
`` 'இனி அப்படி நடக்காது'ன்னு சொன்னீங்க, ஆனா இப்போ..!"- தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து கனிமொழி
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.
இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இனிமேல் இதுபோன்ற ஒரு செயல் நடக்காது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று 23 தமிழக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும், அதேபோல மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு எதிராக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, 'இனி அவ்வாறு நடக்காது' என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?" என்று தவெக அரசை சாடியிருக்கிறார்.













