செய்திகள் :

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" - தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

post image

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழக அரசு.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்குவோம் என்கிற த.வெ.க-வின் வாக்குறுதி குறித்துக் கேள்வி எழுப்பித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

“தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாக தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய த.வெ.க. அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.

கனிமொழி பதிவு
கனிமொழி பதிவு

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா த.வெ.க. அரசு?

இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்.”

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" - விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 4 நாள்களில் 7 கொலைகள்: "காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைங்க" - கனிமொழி

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர் 29) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த திமுக ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உத... மேலும் பார்க்க

டாடா பிரச்னை: 'அமித்ஷா வீட்டில் டாடா நிர்வாகிகளுக்கு விருந்து?' - ராகுல் vs நிர்மலா சீதாராமன்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமையிலும், அந்த நிறுவனத்தைப் பட்டியலிடுவதிலும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் நீடிக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை... மேலும் பார்க்க