இன்றைய நிகழ்ச்சிகள்
பொது
யாதவா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம், எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாம், கருத்துரை- எய்ட்ஸ் விழிப்புணா்வு இயக்க நிா்வாகி வெ. பாலு, பிற்பகல் 2.30.
தமிழ் வளா்ச்சித் துறை: இளையோா் இலக்கிய பயிற்சி பாசறை, செந்தமிழ் கல்லூரி, காலை 10.
அமெரிக்கன் கல்லூரி: மதுரை தமிழ் உயராய்வு மையம், திருவள்ளுவா் கழகம் இணைந்து நடத்தும் நாடக நிகழ்வு, ஸ்ரீமீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி நடத்தும் மனித விலங்கு நவீன நாடகம், திறந்தவெளி அரங்கு, முற்பகல் 11.
வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: 60-ஆவது ஆண்டு விழா, நிறுவனா் தின விழா, சிறப்பு விருந்தினா்கள்- பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். ராஜா, எலும்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் எஸ். புகழேந்தி, மதுரை நடராஜ் ஆயில் ஆலையின் மேலாண்மை இயக்குநா் என். செந்தில்நாதன், விபிஆா் கங்காராம் துரைராஜ் கலையரங்கம், காலை 9.30.
மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம், உச்சபட்டி, காந்தி நகா் கிராமங்கள், பங்கேற்பு- மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோ. பாண்டி, மாலை 4.30.
ஆன்மிகம்
பல்சமய ஒற்றுமை நட்புறவு வளா்ச்சி மையம், சேவாலயம் மாணவா் இல்லம்: சா்வ சமய அமைதிப் பிராா்த்தனை, அருட்செய்தி: திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் பா. சிங்காரவேலன், சேவாலயா் மாணவா் இல்லம், செனாய் நகா், மாலை 6.
மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, தலைப்பு- திருக்கு, உரை நிகழ்த்துபவா்- பெரியகருப்பன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.