செய்திகள் :

இன்ஸ்டா நட்பு; புகைப்படத்தை ஆபாசமாகத் திரித்து மிரட்டும் இளைஞன்; போலீஸில் மாணவி புகார்!

post image

வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், காட்பாடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மனுவில் அவர், ``நான் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தங்கராஜ் என்ற இளைஞன் அறிமுகமானார். அவர் என்னிடம் நட்பாக பழகி உதவி கேட்டதால், முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன்.

இந்த நிலையில், என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி வந்தார். நான் திருமணத்துக்கு மறுத்ததால், என்னிடம் ஆபாசமாக பேசினார். இதையடுத்து, அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டேன். நான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, என்னையும், என் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கிறார்.

இன்ஸ்டாகிராம்

மேலும், நான் அவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற படத்தை ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு மிரட்டி வருகிறார். இதனால், கல்லூரிக்குச் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதுபற்றி, காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். போலீஸார் அந்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டனர்.

ஆனால், அவர் என்னை தொடர்புகொள்ள முயல்கிறார். அவரிடம் உள்ள போலியாகச் சித்தரிக்கப்பட்ட படத்தை அழித்து, பணத்தை மீட்டுத்தரவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். மாணவியின் இந்த புகார்மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கபட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் தமி... மேலும் பார்க்க

'அப்பா, அம்மாவை தனியாக விட்டுவிடாதே' - ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்‌ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்... மேலும் பார்க்க

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகு... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து ப... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும்... மேலும் பார்க்க