செய்திகள் :

இருமுறை மேயர்; அமமுக அமைப்புச் செயலாளர்! - தவெக-வில் இணையும் முயற்சியில் சாருபாலா தொண்டைமான்?

post image

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தவெகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையனை சாருபாலா தொண்டைமான் சமீபத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, தவெகவில் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பதை அவர் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் செங்கோட்டையன்
விஜய் செங்கோட்டையன்

சாருபாலா தொண்டைமான், 2001 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சியின் மேயராக இருமுறை பதவி வகித்தவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸில் சிறிது காலம் செயல்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் அதிகரித்து வரும் நிலையில், சாருபாலா தொண்டைமானின் இந்த அரசியல் நகர்வு குறித்த தகவல்கள் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அவருக்கு உள்ள அரசியல் தொடர்புகளும், சமூக செல்வாக்கும் தவெகவுக்கு பலம் சேர்க்கக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், தவெகவில் இணைவது தொடர்பாக சாருபாலா தொண்டைமான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.!

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.திமுக -காங். மோதல்அவையில் நேரம... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க