செய்திகள் :

"இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

post image

மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக மும்பை மாடல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, ''தியாகிகளின் தியாகங்களால் நாம் மும்பையைப் பெற்றோம். ஆனால் நம் கண் முன்னே, அது இரண்டு குஜராத்தி நபர்களால் விழுங்கப்படப் போகிறது.

நாம் நமது தனிப்பட்ட லட்சியங்களுக்கு முன்னுரிமை அளித்து, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், இந்த பிளவை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களில் யாரும் பிரிந்து செல்லக்கூடாது.

ஷிண்டே-பட்னாவிஸ்

ராஜ் தாக்கரே தலைமையிலான எம்.என்.எஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வதற்கு சில சமரசங்கள் தேவைப்பட்டன. ஒரு கூட்டணி அல்லது காரியங்கள் எப்போதும் ஒருவரின் விருப்பப்படி நடப்பதில்லை. மகாராஷ்டிராவுக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் நாங்கள் எம்.என்.எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

ஒரு கூட்டணி அல்லது கூட்டு உருவாகும்போது, ​​​​எல்லாமே நமது விருப்பப்படி 100% நடப்பதில்லை. அதுபோலவே, அவர்களின் விருப்பப்படியும் 100% நடப்பதில்லை. சில இடங்கள் எங்களுடையவைதான், ஆனால் அவற்றை நாங்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. மராத்தியர்களுக்கு வீரத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடினோம். மும்பைக்காகவும், ஒன்றுபட்ட மகாராஷ்டிரத்திற்காகவும் நடந்த போராட்டத்தில் பாஜகவுக்கோ அல்லது அப்போதைய ஜனசங்கத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை.

குஜராத் மும்பையை விரும்பியது, அதனால் அவர்கள் போராடினார்கள். இன்றுவரை, பாஜக எங்களைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறது'' என்று தெரிவித்தார். மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 65 முதல் 70 வார்டுகளை உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவிற்கு கொடுத்துள்ளார். இதில் 12 முதல் 15 வார்டுகளில் கடந்த தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த கவுன்சிலர்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அல்லது பா.ஜ.கவிற்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த வார்டுகளை ராஜ் தாக்கரே கட்சிக்கு உத்தவ் தாக்கரே கொடுத்துவிட்டார்.

மும்பைக்கு அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கட்சிகளிடையே தொகுதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 68 வார்டுகளிலும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 54 வார்டுகளிலும் போட்டியிட இருக்கின்றன. இங்கு பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையேயும் தொகுதி பங்கீடு உறுதியாகி இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி போன்று ஏக்நாத் ஷிண்டே கட்சியும் இங்கு 68 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

எஞ்சிய 54 வார்டுகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. இதற்கு பா.ஜ.கவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பா.ஜ.க தொண்டர்கள் போட்டியிட மிகவும் குறைவான இடங்கள் கிடைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பையில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. தங்களுக்கு 100 தொகுதிக்கு மேல் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே நிர்ப்பந்தம் செய்து வருகிறார்.

ஆனால் 85 முதல் 90 வார்டுகள் மட்டுமே சிவசேனாவிற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சிவசேனா அமைச்சர் உதய் சாவந்த் தெரிவித்தார். இன்னும் 20 வார்டுகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தங்களது இந்திய குடியரசுக்கட்சிக்கு வார்டுகள் ஒதுக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரையும் பா.ஜ.க தலைவர்கள் சந்தித்து பேசியிருக்கின்றனர். வேட்பு மனுதாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் தாராவியை சேர்ந்த தமிழ் பெண் மஞ்சுளா கதிர்வேல் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை த... மேலும் பார்க்க

திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிர... மேலும் பார்க்க

100 நாள் வேலைத்திட்டம்: "நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?" - அழைப்பு விடுக்கும் எல்.முருகன்

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை ... மேலும் பார்க்க

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ்இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து... மேலும் பார்க்க