செய்திகள் :

`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி

post image

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பயணம் இது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் மோடி. அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுப்பினர்கள் 'மோடி, மோடி' என முழக்கமிட்டு எழுந்து நின்று உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, ``இஸ்ரேல் இந்தியாவால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன். இங்கு உரையாற்றுவது ஒரு சிறப்பு மற்றும் மரியாதை. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு இன்று நேற்று தொடங்கியதல்ல, இது 2000 ஆண்டுகளுக்கு மேலானது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி

யூதர்களின் புனித நூல்களான 'தால்முட்' மற்றும் 'எஸ்தர் புத்தகம்' ஆகியவற்றில் இந்தியாவுடனான வணிகத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம், துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது. மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாத 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையைக் கொண்டுள்ளது. காசா பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும்." என்றார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நாடாளுமன்ற கௌரவமான 'க்னெசெட் சபாநாயகர் பதக்கம்' முதல் முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்தப் பதக்கத்தைப் பெற்ற பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``எனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தாழ்மையுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவம் ஒரு தனிநபருக்கானது அல்ல, மாறாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நீடித்த நட்புறவு மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களுக்கான அங்கீகாரம்" எனப் பதிவிட்டிருந்தார்.

விருதுடன் மோடி
விருதுடன் மோடி

ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அந்த நாட்டின் மிக உயரிய விருதான 'கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீனம்' (Grand Collar of the State of Palestine) விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடி இணைந்துள்ளார்.

`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு' டு `பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வேணுமா?' | கழுகார்

தவிக்கும் 'பெல்' மாஜி!சீட்டுக்காக மல்லுக்கட்டும் உறவினர்...மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக் குறிவைத்து, இலைக்கட்சி 'பெல்' மாஜியின் உறவினர் தீவிரமாகக் காய் நகர்த்துகிறாராம். தொகுதியின் சிட்... மேலும் பார்க்க

``இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது" - நடிகர் மன்சூர் அலிகான்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்... மேலும் பார்க்க

'80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் விஜய்?' - குழப்பத்தில் நிர்வாகிகள்!

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்போகிறார் என பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலால் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில... மேலும் பார்க்க

நல்லகண்ணு: "அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம்" - நடிகர் பார்த்திபன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக... மேலும் பார்க்க

மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும் ஏராளமான கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களை மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்... மேலும் பார்க்க